Tuesday 30th of April 2024 11:04:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழரசுக்கட்சி மீது விசமப் பிரச்சாரம் நடைபெறுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு!

தமிழரசுக்கட்சி மீது விசமப் பிரச்சாரம் நடைபெறுவதாக சுமந்திரன் குற்றச்சாட்டு!


தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்று தமிழரசுக்கட்சி கோரிக்கைவிடுத்து ஐக்கியநாடுகள் சபைக்கு அறிக்கை எழுதியுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவை விசமனத்தனமா பொய்ப் பிரச்சாரம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சிரேஷ்ட பிரதித் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும் குறித்த ஊடகச் சந்திப்பில் பங்குகொண்டிருந்தனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த சுமந்திரன்,

தமிழரசுக்கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பிலான உண்மைத் தன்மை தொடர்பில் தமக்குத் தெரியாது என்று தெரிவித்த சுமந்திரன்,

அதில் கையொப்பமிட்டவர்களாக சொல்லப்பட்ட உறுப்பினர்கள் தாம் அவ்வாறு கையொப்பமிடவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

எனவே அவ்வாறு அவர்களின் கையொப்பங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றோம் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது அது அனைவரும் அறிந்த விடயமாகும்

ஆனால் தற்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும் விசாரிக்க கோரி சம்பந்தனால் ஒரு ஆவணம் அனுப்பப்பட்டதாக அது முற்றிலும் ஒரு பொய்யான விடயம் இந்த விடயத்தில் ஊடகங்களும் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும் அதாவது ஒரு விடயத்தை செய்தியாக பிரசுரிக்கும் போது அதனை ஆராய்ந்த பின் செய்தியாக பிரசுரிக்க வேண்டும் அத்தோடு தற்பொழுது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. தமிழரசுக்கட்சி தனியாகச் செயற்படப்போகின்றது கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுகிறது என.

அவ்வாறான ஒரு சம்பவம் இடம் பெறாது எந்த காலத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை

அதே போல எந்தளவுக்கு இணைந்து செயல்பட முடியுமோ அந்தளவுக்கு இணைந்து செயற்படுகின்றோம், அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் எம்முடன் நல்ல உறவாக உள்ளார்கள் அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுகின்றோம் என கூறுகின்றார்கள்

நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒற்றுமையாக செயற்படுகின்றோம் எனினும் கூட்டாகச் ஏற்படும் போது பல பிரச்சனைகள் முரண்பாடுகள் ஏற்படும் ஆனால் தமிழ் மக்களுக்காக பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரிந்தோ அல்லது தனித்தோ செயற்படவில்லை என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE